​பொதுவானவை

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கேரட் – 1
தக்காளி – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் – அரை கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
201607020930097540 how to make Ramadan Nombu Kanji SECVPF
செய்முறை :

* கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

* மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

A09764E6 B71F 426D 9D7D 8EAA3B6889DB L styvpf

* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

5F930F65 543F 4E79 AC20 6AE87D6C2B8F L styvpf

* கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

9E881995 47C7 4EC9 A58D 4D95C19947DF L styvpf

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* அடுத்து அதை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறவும்.

* சுவையான நோன்பு கஞ்சி ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button