எடை குறைய

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப அவசியம் இத படிச்சு தெரிஞ்சுக்கங்க…

டயட் மந்திரங்களை பற்றியும் வழிமுறைகள் பற்றியும் எண்ணிலடங்கா புத்தகங்களும் கட்டுரைகளும் வந்தாகி விட்டது; அவைகளை நம்மில் பலரும் படித்தும் இருப்போம்.

இருப்பினும் இவ்வாறு நாம் படிக்கும் தகவல்களில் பெரும்பாலும் கட்டுக்கதைகளையும், பாதி உண்மைகளையும் மட்டும் தான். சொல்லப்போனால் இத்தகவல்கள் எல்லாம் உங்கள் உடல் கட்டுக்கோப்பை பாதித்து விடும்.

இவ்வாறான அனைத்து டயட் கட்டுக்கதைகள் எல்லாம் ஒன்று பொது அறிவின் மூலமாக உதயமாகியிருக்கும் அல்லது தவறான ஆய்வு அறிக்கைகளின் மூலமாக உதயமாகியிருக்கும். வயிறு நிறையும் காலை உணவு முதல் டயட் வரை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தவறான புரிதல்களைப் பற்றி பார்க்கலாமா?

உடல் எடை குறைப்பிற்கு பால் உதவிடும் உண்மை:

நம் உடலில் உள்ள கால்சியம், கொழுப்புகளை திறம்பட உடைக்க உதவும். இதன் அடிப்படையில் கூறப்படுவது தான் உடல் எடை குறையும் என்ற கட்டுக்கதை. இருப்பினும் பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை உண்ணுவதற்கும், ஒருவரின் கலோரிகளின் எண்ணிக்கைக்கும், எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இவ்வகையான பொருட்களை பயன்படுத்தும் போது குறைவான கொழுப்புகளை கொண்டவைகளை பயன்படுத்துங்கள். அதுவே இந்த விஷயத்தில் சிறந்த அறிவுரையாக வழங்கப்படும். கலோரிகள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் குறைவாக இருக்கும் போது உங்கள் உடலில் தேவையில்லாத கலோரிகள் தேங்குவது தடுக்கப்படும்.

வயிறு நிறைய காலை உணவும்…

மிதமான இரவு உணவும்… உண்மை: காலையில் அரசனை போல் உண்ண வேணும்; இரவில் ஏழையை போல் உண்ண வேண்டும் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். பகல் நேரத்தில் நாம் உழைக்க வேண்டி வருவதால் நமக்கு ஆற்றல் திறன் அதிகமாக தேவைப்படும், அதே போல் இரவு நேரத்தில் நாம் தூங்குவதால் ஆற்றல் திறன் குறைவாக தேவைப்படும் என்ற அடிப்படையில் தான் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடை குறைப்பிற்கு இதனை தொடர்புபடுத்த முடியாது. காலை நேரத்தில் நம் உடலில் கார்டிசோல் அளவுகள் அதிகமாக இருக்கும். பொழுது ஓட ஓட இது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். உயரிய கார்டிசோல் அளவுகளுக்கும், இன்சுலின் எதிர்ப்பு நிலைக்கும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதன் படி இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் மிக வேகமாக கொழுப்பாக மாறும்.

காபி உடல் எடையை குறைக்கும்

உண்மை: காபி குடிப்பது உங்கள் பசியை கட்டுப்படுத்தும் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் தினமும் 6-7 கப் வரை காபி குடித்தீர்கள் என்றால் உங்கள் டயட் திட்டத்தின் மீது அது எந்த ஒரு பயனையும் அளிக்காது. மாறாக தூக்கமின்மை, பதற்றம் மற்றும் உயரிய இரத்த அழுத்தம் போன்ற சில பக்க விளைவுகளை அது ஏற்படுத்திவிடும். அதனால் நீங்கள் அலுவலகத்தில் இருக்கையில், அடுத்த கப் காபி வேண்டும் என நினைத்தால் இந்த தகவலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். காபிக்கு பதிலாக நற்பதமான ஜூஸ் மற்றும் ஆரோக்கியமான பானங்களை பருகுங்கள்.

அரிசி சாதமும்..

உடல் எடை அதிகரிப்பும்.. உண்மை: நாம் அன்றாடம் பின்பற்றும் ஒரு பொதுவான கட்டுக்கதையாகும் இது. உடல் எடை குறையும் என்ற எண்ணத்தில் உங்களில் எத்தனை பேர் இரவில் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறீர்கள்? எங்களை நம்புங்கள்; டயட் பற்றிய மிக நீளமான கட்டுக்கதைகளின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். இரவு நேரத்திலேயோ அல்லது பகல் நேரத்திலேயோ அரிசி சாதத்தை சாப்பிடுவதற்கும், உடல் எடைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அதற்கு காரணம் உடல் எடை அதிகரிப்பதோ குறைவதோ அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகள் மற்றும் கொழுப்புகளின் அளவை பொறுத்தே அமையும்.

பாஸ்தா உடல் எடையை அதிகரிக்கும் உண்மை:

பாஸ்தாவை கட்டுப்பாட்டுடன் மிதமான அளவில் உட்கொண்டால், உடல் எடை அதிகரிப்பிற்கு அது ஒரு காரணமாக அமையாது. ஆனால் நீங்கள் உண்ணும் பாஸ்தாவுடன் வேறு என்னென்ன பொருட்களை சேர்த்துள்ளீர்கள் என்பது தான் மிகவும் முக்கியம். சில நேரங்களில் நமக்கு பிடித்த பாஸ்தாவை நாம் சமைக்கும் போது, அதனுடன் சீஸ் அல்லது வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து விட்டு, அதற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பிற்கு பாஸ்தாவின் மீது பழியை போடுவோம். சொல்லப்போனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாஸ்தா உங்கள் உடல் எடை கட்டுப்பாடு திட்டத்திற்கு முக்கிய அங்கமாக விளங்கக்கூடும்.

இரவு 8 மணிக்கு பிறகு உணவை தவிர்க்கவும்

உண்மை: நாம் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் சரி, நம் உடல், உணவை ஒரே மாதிரி தான் செரிக்க செய்யும்; அதே போல் கலோரிகள் பயன்பாடும் ஒரே மாதிரி தான் நடைபெறும். நீங்கள் பகல் நேரத்தில் என்ன சாப்பிட்டாலும் சரி, கொழுப்பின் வடிவில் உங்கள் உடல் சில கூடுதல் கலோரிகளை சேமிக்கும். அதனால் நாம் என்ன உண்ணுகிறோம் என்பது தான் முக்கியமே தவிர எப்போது உண்ணுகிறோம் என்பதல்ல.

உடல் எடையை குறைக்க கலோரிகளை கடுமையான முறையில் குறைத்தல்

உண்மை: நிலையான எடையை பராமரிக்க பட்டினி இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக மிதமான அளவு கலோரிகள் அடங்கிய உணவுகளை உண்ணுங்கள். திடீரென உடல் எடை குறைந்தாலும் வேறு பல உடல்நல கோளாறுகள் வந்து விடும்.

உடல் எடை குறைப்பும்…

உடற்பயிற்சியும்… உண்மை: ஜிம்மே கதியென கிடந்தால் உடல் எடையை குறைக்கலாம் என பலர் நம்புகின்றனர். ஆனால் உடல் கட்டுக்கோப்புடன் இருக்க வெறுமனே 20 நிமிடங்கள் ஓட்டம் மற்றும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சியும் போதும். உடற்பயிற்சியோடு சேர்த்து ஏரோபிக்ஸ் மற்றும் இதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இதனுடன் நீங்கள் நிர்ணயித்த கலோரிகளின் அளவுக்குள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

உடனடி டயட்

உண்மை: தற்காலிக டயட் திட்டங்கள் உங்கள் எடையால் தற்காலிகமாக தான் குறைக்க உதவும். இவ்வகையான திட்டங்கள் நிரந்தர தீர்வை அளிக்காது.

மெட்டபாலிசத்திற்கு குறைந்த அளவில் அதிக முறை உணவுகளை உண்ணுதல்

உண்மை: குறைந்த அளவில் அதிக முறை உணவுகளை உண்ணுதல் என்பது பலரும் பின்பற்றக் கூடிய புகழ்பெற்ற ஒரு வழிமுறையாகும். பல காலமாக பலரும் நம்பி வரும் மற்றொரு கட்டுக்கதை இதுவாகும். இந்த அமைப்பின் பொறியில் நம்மில் பலரும் சிக்கியிருக்கிறோம். ஆரோக்கியமற்ற உணவுகளை ஒரே நேரத்தில் அதிக அளவில் உண்ணுவதற்கு பதில், 6 வேளையாக குறைந்த அளவிலான உணவுகளை உண்ணுவீர்கள். சிறிய அளவில் பல தடவை உண்ணும் போது உங்கள் உடலுக்கு எரிபொருளாக அது அமையும் என கூறப்படுகிறது. ஆனால் இது பயனை தருகிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட முடியவில்லை. உங்கள் உடலுக்கு தெரியும் எது அதற்கு சிறப்பாக அமையும் என்று. அதனால் காது கொடுத்து கேளுங்கள்.

15 1431665020 10 dietmyths

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button