கியூல்லிங் ஜூவல்லரி…

அந்திவானத்தில் அலையும் மேகங்களில் கிராப்ட் செய்து காதுகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு இதமாக இருக்கும். அந்தளவுக்கு எடையற்றவை கியூல்லிங் ஜூவல்லரிகள். வண்ணக் காகிதங்களை விருப்பத்துக்கு ஏற்ப உருட்டி, மடித்து, வளைத்து, நெளித்தால் பூக்களாகவும், மயிலாகவும் அவதாரம் எடுக்கின்றன கியூல்லிங் ஜூவல்லரிகள்.

கியூல்லிங் காகிதங்களைக் கொண்டு பல்வேறு கிராப்ட் வேலைப்பாடுகளும் செய்ய முடியும். பொம்மை, ஜூவல்லரி, வாழ்த்து அட்டை என கலந்து கட்டி தயாரிக்கலாம். குறைந்த முதலீட்டில் தயாரிக்கும் இந்த பொருட்களை மார்க்கெட்டிங் செய்தால் நல்லலாபம் பார்க்கலாம். பார்ட்டை வருமானத்துக்கும் நல்ல வாய்ப்புண்டு. இதற்கெல்லாம் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை.

பயணத்தில், காத்திருப்பில் என நேரம் வீணாகிறது என நீங்கள் நினைக்கும் எந்த இடத்திலும் உங்களால் கியூல்லிங் தயாரிப்புகளை உருவாக்க முடியும். வண்ண வண்ண கியூல்லிங் காகிதங்கள் காதணி, செயின், டாலர், பிரேஸ்லெட் தயாரிப்பதற்கு’பேஸ்’மெட்டீரியல், கியூல்லிங் காகிதங்களை சுற்றுவதற்கான நீடில், ஒட்டுவதற்கு பயன்படுத்தும் ‘கம்’ ஆகியவையும் செட்டாகவே கிடைக்கிறது.

இதில் என்னென்ன செய்யலாம் என்பதை விளக்கும் புத்தகங்கள் உங்களுக்கு வழிகாட்டும். பிளெயின் கிரீட்டிங் கார்டில் உங்களுக்கு பிடித்த டிசைன் மற்றும் வாழ்த்தை வரைந்து கொள்ளலாம். வரைந்திருக்கும் டிசைன் மீது கியூல்லிங் பேப்பரை வெவ்வேறு வடிவங்களில் மடித்து ஒட்டி விடலாம். அதன் மீது நெயில் பாலீஷ் ஷைனர் கொண்டு மெரு கூட்டலாம். இந்த கிரீட்டிங் கார்டில் உங்களது உழைப்பு, அன்பு, கிரியேட்டி விட்டி, கனவு எல்லாம் ஒரே சேர மலர்ந்திருப்பதை உங்களால் உணர முடியும்.

கொடுப்பதும், பெறுவதும் பெருமைக்குரியதாக மாறும். இதே போல் நீங்கள் அணியும் உடைகளுக்கு ஏற்ற அணிகலன்களையும் சில நிமிடங்களில் நீங்களே செய்து அணிந்து அழகு காட்ட முடியும். பள்ளிக் குழந்தைகளின் கைகளில் கியூல்லிங் காகிதங்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து அழிச்சாட்டியம் செய்வதைப் பார்க்கலாம். இனி என்ன புகுந்து விளையாடுங்கள் கியூல்லிங் கிராப்டில்.

Leave a Reply