27.8 C
Chennai
Tuesday, Dec 10, 2024
pattani kurma 1672758928
Other News

சுவையான… பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:

* பட்டாணி – 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 3-4

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் பால் – 1/2 கப்

* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* எண்ணெய் – தேவையான அளவு

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிதுpattani kurma 1672758928

செய்முறை:

* முதலில் ஊற வைத்த பட்டாணியை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் சோம்பு பொடியை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பட்டாணி குருமா தயார்.

Related posts

அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா

nathan

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

nathan

கலைஞர்100 நிகழ்ச்சி-நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள்

nathan

தினமும் செக்*ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர்.. மனைவி செய்த காரியம்!!

nathan

sesame oil in tamil : எள் எண்ணெய்: உங்கள் உணவில் ஒரு சுவையான, சத்தான சேர்க்கை

nathan

சனியின் வக்ர பெயர்ச்சி – கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் யார்?

nathan

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

nathan

ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்கு 5000 கோடி செலவு, மொத்த லிஸ்ட்

nathan

தாயைக் கொன்ற மகன்.. வழக்கில் திடீர் திருப்பம்..

nathan