Other News

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : முக்கிய அறிவிப்பு!!

கனடாவின் அட்லாண்டிக் கவுன்சில் குடியேற்றம் தொடர்பாக இந்த எச்சரிக்கையை வெளியிட்டது, கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் கணிசமான எண்ணிக்கையால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது என்று கூறியுள்ளது.

கணிசமான எண்ணிக்கையில் கனடாவில் குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடியேறிய சில வருடங்களிலேயே அவர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் 2013ஆம் ஆண்டு 6,000 ஆக இருந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் 32,000 ஆக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கனடாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களில் 50% மட்டுமே ஐந்து வருடங்களுக்கும் மேலாக கனடாவில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடுகள், சுகாதார சேவைகள், கல்வி வசதிகள் மற்றும் பாடசாலை வசதிகள் போன்ற காரணங்களுக்காக புலம்பெயர்ந்தோர் கனடாவில் தொடர்ந்து வாழ விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக அண்மையில் உக்ரைனில் இருந்து கனடாவின் நோவா ஸ்கொட்டியாவிற்கு குடிபெயர்ந்த பெண் ஒருவர் வாழ்க்கைச் செலவு காரணமாக கனடாவை விட்டு வெளியேறி ஜோர்ஜியாவில் குடியேறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறிய டிடென்யா மெலினெக் என்ற பெண் கனடாவை விட்டு வெளியேறியுள்ளார். வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக கனடாவை விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

எனவே, கனடாவில் குடியேறுபவர்கள் இந்தக் காரணிகளைப் பற்றி அறிந்து அதற்கேற்ப தங்கள் குடியேற்றத்தைத் திட்டமிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கையில் இருந்து கனடாவுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், பெரும் தொகையை செலுத்தி கனடா செல்வோர் இவ்வாறான வாழ்க்கைச் செலவு அபாயங்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறுபுறம் கனடா செல்லும் இலங்கையர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி சரியான திட்டங்களை வகுத்தால் அவர்களின் வாழ்வு பிரகாசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button