ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடன் பணிபுரிபவர்களிடம் விவாதிக்கக் கூடாத 7 விஷயங்கள்!!!

அனைத்து நிகழ்தகவுகளிலும், நம்முடன் பணிபுரியும் பலரையும் நாம் நண்பர்களாக பாவித்து, நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை விட, அவர்களிடம் அதிக நேரத்தை செலவிடுவோம். ஆனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த இடத்தில் கோட்டை கிழிக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதே போல், அவர்களிடம் எந்த வரம்பு வரை நட்பு பாராட்டி, தொழில் ரீதியான உறவை வளர்ப்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய பனி அலுவலக சட்ட வல்லுநர் ஜாய்தீப் ஹோர், வேலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையேயான எல்லை தெளிவின்மை அடைந்து கொண்டே போகிறது என்றும், அதனால் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பணியாளர்களுக்கு பிரச்சனைகள் உருவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

7 Things Never To Discuss With Colleagues
உடன் பணிபுரிபவர்களிடம் நாம் பேசுவதை தவிர்க்க வேண்டிய 7 விஷயங்களை பற்றி அவர் பட்டியலிட்டுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

* முதலாவதாக, உடன் பணிபுரிபவர்களிடம் நம் செக்ஸ் வாழ்க்கையை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஹோர் கூறுகிறார். அதற்கு காரணம் அது பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால். பாலியல் தொல்லையின் சொல்பொருள் விளக்கம் பரந்ததாகும் என்று அவர் உறுதியாக கூறுகிறார்.

* இரண்டாவதாக, வேலை பார்க்கும் இடத்தில் உள்ள சில குழுக்களின் மீது பழிதூற்றக் கூடாது என்ற நம் கட்டுப்பாட்டை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். அதற்கு காரணம் தனிப்பட்ட நம் கருத்துக்கள் ஆபத்துகளில் முடியும்.

* மூன்றாவதாக, வேலையிடத்தில் மற்றவர்களை பற்றி வீண் பேச்சில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு காரணம் அப்படி பேசுபவர்கள் பணியிடத்தில் ஆக்கவளமுடையவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது ஆபத்தும் கூட.

* நான்காவதாக, உங்களின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி நீங்கள் குறைவாக உங்கள் மூத்த அதிகாரியிடம் பேசக்கூடாது. இது அவர் உங்கள் மீது வைத்துள்ள அபிப்ராயத்தில் இடைவெளியை உண்டாக்கி விடும். மேலும் வேலை விஷயத்திலும் உங்களை குறைவாக மதிப்பிடும் வாய்ப்பை உண்டாக்கி விடும்.

* ஐந்தாவதாக, உடன் வேலைப் பார்ப்பவர் அல்லது வாடிக்கையாளர் ஒருவரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால், அதற்கு எப்படி நடந்து கொள்வது என்பதில் கவனம் தேவை; முக்கியமாக அவர் கோபமாக அல்லது விரக்தியுடன் இருக்கும் சமயத்தில். அதற்கு காரணம் தொடர்ச்சியாக மற்றவர்களை பற்றிய இடைவேளை உருவாகும் போது, அவர்களின் மனநிலை சோர்வடையும்.

* ஆறாவதாக, தான் வாழ்க்கையில் செய்துள்ள பெரிய தவறுகளை பற்றி உடன் பணிபுரிபவர்களிடம் பேசவேக் கூடாது. காரணம் அதை அவர்கள் மற்றவர்களிடம் கூறி விடலாம்.

* ஏழாவதாக, நம் வாழ்க்கையில் நடந்துள்ள முக்கிய தருணங்களை, தவறான முறையில் பகிரும் போது, அது பல பிரச்சனைகளை உண்டாக்கி விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button