ஆரோக்கியம் குறிப்புகள்

தாய்ப்பால் கொடுப்பது மார்பகத்தின் வடிவமைப்பை மாற்றுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தாய்ப்பால் கொடுப்பதனால் தாய் மற்றும் சேய் இருவருக்குமே நன்மைகள் உண்டாகின்றன. குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பால் முலமாக தான் கிடைக்கின்றன. அதுமட்டுல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதனால் தாய்க்கு பலவழிகளில் நன்மைகள் உண்டாகின்றன.

பல தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு பயப்படுகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் போது வலி உண்டாவது, போதிய அளவு தாய்ப்பால் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் புதிதாக தாயான பெண்கள் பயப்படுகின்றனர். அதில் ஒன்று தான் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகத்தின் வடிவம் மாறிவிடுமோ என்ற பயம்!

மார்பகத்தில் உண்டாகும் மாற்றம்

கர்ப்பகாலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்களின் மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில் பெண்களின் மார்பகம் பெரிதாகிறது. பாலூட்டும் போது மார்பகம் தளர்ந்துவிடுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இயற்கை தான்

கர்ப்பகாலத்தில் பாலூட்டலுக்காக பெரிதான மார்பகமானது, பாலூட்டலின் போது தளர்ந்துவிடுவது இயற்கை தான். நீங்கள் அதற்காக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால் மட்டும் மார்பகம் தளராமல் இருக்காது. பிரசவத்திற்கு பிறகு மார்பங்கள் தளர்வது இயற்கையானது தான்.

ஏன் பயம்?

பெண்கள் தங்களது மார்பகம் தளர்ந்து காணப்பட்டால், தன் கணவருக்கு தன் மீது உள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். இதில் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. இது சற்று நாட்களில் சரியாகிவிடக்கூடிய ஒன்று தான். அதற்காக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் எல்லாம் தயக்கம் காட்ட கூடாது.

என்ன செய்யலாம்?

மார்பகங்கள் தளராமல் இருக்க, நீங்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பழங்கள், காய்க்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். மார்பகத்தை வட்ட வடிவத்தில் எண்ணெய்யால் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

உறவு

தாய்க்கும் குழந்தைக்கும் மிக நெருக்கமான பந்தத்தை தருவது, தாய்ப்பால் கொடுப்பது மட்டும் தான். அந்த பந்தத்தை சிறு சிறு விஷயங்களை நினைத்து பயந்து தவிர்த்துவிட வேண்டாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button