தலைமுடி சிகிச்சை

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருந்தால் மட்டும் போதாது, நல்ல மணத்துடனும் இருக்க வேண்டும். பொதுவாக தலைமுடிக்கு என்று இயற்கை வாசனை உள்ளது. ஆனால் வியர்வையினால் இந்த வாசனை போய், தலையில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. ஒருவர் வியர்வை நாற்றத்துடன் இருந்தால், அவர்களது அருகில் செல்லவே சங்கடமாக இருக்கும். இப்படி ஒருவர் தன் அருகில் சங்கடத்துடன் வருவதை நிச்சயம் யாரும் விரும்பமாட்டோம்.

DIY Hair Perfumes To Get Rid Of Smelly Hair
எப்படி நமது உடலில் வீசும் வியர்வை நாற்றத்தை மறைக்க பெர்ஃப்யூம்கள் உள்ளதோ, அதேப் போல் தலைமுடியில் வீசும் துர்நாற்றத்தை மறைக்கவும் ஹேர் பெர்ஃப்யூம்கள் உள்ளன. ஆனால் கெமிக்கல் கலந்த ஹேர் பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்த பலரும் யோசிப்போம். ஏற்கனவே தலைமுடி உதிரும் வேளையில், கெமிக்கல் கலந்த மற்ற பொருட்கள் தலைக்கு பயன்படுத்த யாருக்கு தான் பயம் இருக்காது. ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அற்புதமான 3 நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்களை கீழே கொடுத்துள்ளது. இந்த பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்தினால், தலைமுடி நல்ல மணத்துடன் இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அத்தியாவசிய நறுமண எண்ணெய் பெர்ஃப்யூம்

இந்த பெர்ஃப்யூம் உங்களின் தலைமுடியை புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடனும் வைத்திருக்க உதவும். முக்கியமாக இந்த பெர்ஃப்யூம்மைத் தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் செலவு குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தேவையான பொருட்கள்:

* விருப்பமான அத்தியாவசிய நறுமண எண்ணெய்

* கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 100 மிலி

தயாரிக்கும் முறை:

* ஒரு பௌலில் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மூடிக் கொண்டு, அதை குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்து பயன்படுத்தவும்.

ரோஸ்வாட்டர் பெர்ஃப்யூம்

ரோஸ்வாட்டர் அற்புதமான வாசனையைக் கொண்டது மற்றும் இது முடிக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. அதில் முடியின் சிக்கலைக் குறைப்பது, முடிக்கு பளபளப்பை சேர்ப்பது, முடியை மென்மையாக்குவது மற்றும் பொடுகு பிரச்சனை மற்றும் தலையில் எண்ணெய் வழிவதைக் குறைப்பது போன்றவை அடங்கும். இப்போது ரோஸ்வாட்டர் பெர்ஃப்யூம்மை எப்படி செய்வதென்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* ரோஸ் வாட்டர் – 1/2 கப்

* மல்லிகை எண்ணெய் – 10-12 துளிகள்

* ஆரஞ்சு எண்ணெய் – 3-4 துளிகள்

தயாரிக்கும் முறை:

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக எடுத்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி மூடிக் கொள்ள வேண்டும்.

* இந்த பாட்டிலை குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெய் பெர்ஃப்யூம்

தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது, முடி சிக்கலைக் குறைக்கிறது மற்றும் முடிக்கு பொலிவைத் தருகிறது. முக்கியமாக இந்த தேங்காய் எண்ணெய் மிகவும் நம்பகமான மற்றும் முடிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருள். எனவே தேங்காய் எண்ணெய் பெர்ஃப்யூம் நிச்சயம் உங்களின் முடி துர்நாற்றத்தைப் போக்கும்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 15-20 துளிகள்

* ரோஸ் வாட்டர் – 1/2 கப்

* மல்லிகை எண்ணெய் – 8-10 துளிகள்

தயாரிக்கும் முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

* பின்பு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்வதற்கு பாட்டிலை நன்கு குலுக்குங்கள்.

* இந்த பாட்டிலை குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு
குறிப்பு
என்ன தான் இயற்கை பொருளாக இருந்தாலும், சில பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஹேர் பெர்ஃப்யூம்களுக்கு பயன்படுத்தும் பொருட்களை ஒருமுறை உங்கள் சருமத்தில் சோதனை செய்ய மறவாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button