சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்
தேவையான பொருட்கள் :

மைதா – 1 கப்,
சீஸ் துருவல் – கால் கப்,
சீஸ் க்யூப்ஸ் – 10,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை.
நெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்,
உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

* மைதாவுடன் பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, நெய், துருவிய சீஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

* பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இடுங்கள்.

* சீஸ் க்யூப்களை எடுத்துத் துருவி, பூரி மேல் தூவுங்கள். அதை மற்றொரு பூரியால் மூடி, பாய் சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளுங்கள்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் உருட்டி வைத்துள்ள சீஸ் உருளைகளை போட்டு பொரித்தெடுங்கள்.

* பிள்ளைகளுக்குக் கடிப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சத்தான ஸ்டிக்ஸ்!

* சுலபமாக செய்யக்கூடிய இந்த சீஸ் ஸ்டிக்ஸில், கால்சியமும் புரதமும் நிறைந்துள்ளன. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு உதவும். நரம்பு மண்டலத்தை உஷார் நிலையில் வைத்திருக்கவும் உதவும். 201606110917200396 Children favorite cheese sticks SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button