சிற்றுண்டி வகைகள்

கேழ்­வ­ரகு புட்டு

தேவை­யான பொருட்கள்
கேழ்­வ­ரகு மாவு (அ) ராகி மாவு – 100 கிராம்
தேங்காய் துருவல் – 50 கிராம்
பெரிய வெங்­காயம் – 1
மிளகாய் – 2
சுடு­தண்ணீர் – 30 மி.லி.
முந்­திரி – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு ½ டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்;
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
கறி­வேப்­பிலை – சிறி­த­ளவு
மல்­லித்­தழை – சிறி­த­ளவு

செய்­முறை :
ராகி மாவுடன் சுடு தண்ணீர், உப்பு சேர்த்து உதிரும் பதத்தில் பிசைந்து கொள்­ளவும். கொள கொள என்று பிசையக் கூடாது. ரவை சலிக்கும் சல்­லடை (அ) கோதுமை சலிக்கும் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் சல்­ல­டையில் மாவைத் தேய்த்து சலித்துக் கொள்­ளவும். மிகவும் மிரு­து­வாக இருக்கும் மாவை, இடி­யப்பத் தட்­டிலோ (அ) இட்லி தட்­டிலோ வைத்து சுமார் 10–12 நிமி­டங்கள் வேக வைத்து இறக்­கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடா­னதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்­கிய முந்­திரி, வெங்­காயம், வர­மி­ளகாய், கறி­வேப்­பிலை, மல்­லித்­த­ழையைச் சேர்த்து, கரு­காமல் வதக்­கவும். அத­னுடன் வேக வைத்து இறக்­கிய ராகி மாவைச் சேர்த்து நன்கு கலக்கிப் பிரட்­டவும். தேவை­யெனில் உப்புச் சேர்க்­கலாம். சுவை­யான புட்டு தயார்.
குறிப்பு :
* சின்ன வெங்­காயம், பச்சை மிளகாய் பயன்­ப­டுத்­தியும் கேழ்­வ­ரகு புட்டு செய்­யலாம்.
* வேண்­டு­மெனில் பொடியாய் நறுக்­கிய கேரட், பீன்ஸைச் சேர்த்தும் புட்டு செய்­யலாம்.
* உதி­ரியாய் இருந்தால் தான் புட்டு சுவைக்கும்.
* ராகியில் அதிக சுண்­ணாம்பு சத்தும், புரதச் சத்தும், நார்ச் சத்தும் நிறைந்­துள்­ளன.
* பிறந்த குழந்­தைக்கு ஆறு மாதத்தில் இருந்து தரக்­கூ­டிய முதல் மாவு, கேழ்­வ­ரகு மாவு.
* குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு மிகவும் ஏற்­றது.
* புட்டு சாப்­பா­டாக வேண்­டு­மெனில் ராகியைப் பிரட்டும் போது சிறிது தண்ணீர் தெளித்து பிரட்­டினால் போதும். pittu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button