அசைவ வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா

சிக்கன் பாஸ்தாவை வீட்டிலேயே சுவையாக செய்யலாம். இப்போது சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தா
தேவையான பொருட்கள் :

பாஸ்தா – 500 கிராம்
சிக்கன் – 300 கிராம் (எலும்பில்லாதது)
கேரட் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
ப்ரோக்கோலி – 50 கிராம்
பச்சை குடமிளகாய் – 50 கிராம்
பச்சை பட்டாணி – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி சாஸ் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 1 பல்
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /2 தேக்கரண்டி
சீஸ் துருவியது – விருப்பமான அளவு
எண்ணெய், தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* குடமிளகாயை 1 /2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் நன்றாக கழுவி கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி குடமிளகாய், ப்ரோக்கோலி இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். அரை வேக்காடாக வெந்தால் போதுமானது. வதக்கியவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் (பாஸ்தா வேக வைக்க), சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். பாஸ்தா வேகும் வரை அடிக்கடி கிளறி கொண்டிருக்க வேண்டும்.

* பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு எடுத்து தனியாக வைக்கவும். பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது.

* மீதமுள்ள தண்ணீரை வடித்து விட்டு மீண்டும் அதில் குளிர்ந்த நீரை ஊற்றி பாஸ்தாவை குளிர வைத்து தண்ணீரை வடித்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கி பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி போட்டு வேக விடவும். சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வரை வேக விடவும்.

* காய்கறிகள் பாதி வெந்ததும், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து, சிக்கன் வேக வைக்க தேவையான தண்ணீரும் சேர்த்து வேக விடவும்.

* சிக்கன் பாதி வெந்ததும் தக்காளி சாஸ், வேகவைத்த குடமிளகாய், ப்ரோக்கோலி, பாஸ்தா வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலந்து வேக விடவும்.

* வேக வைத்த பாஸ்தாவை, மசாலாவுடன் கலந்து 5 நிமிடங்கள் கிளறி விடவும்.

* பரிமாறுவதற்கு முன்பு பாஸ்தா மீது சீஸ் தூவி பரிமாறவும்.

* குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். 201607011140178851 how to make chicken pasta SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button