சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான சென்னா சாட்

மாலை நேரங்களில் செய்து சாப்பிட சென்னா சாட் மிகவும் ஏற்றது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான சென்னா சாட்
தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 1,
கொத்தமல்லித் தழை – 2 டேபிள்ஸ்பூன்,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை அல்லது பச்சை மிளகாய் – 1,
எலுமிச்சைச்சாறு – சிறிதளவு,
ஓமப் பொடி – தேவைக்கு
கேரட் துருவல் – 3 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை :

* வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்த பின் வேகவைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலையுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள், சாட் மசாலா, கேரட் துருவல், உப்பு சேர்த்து எலுமிச்சைச்சாறு சோத்து நன்றாக கலந்து ஒரு கிண்ணத்தில் போட்டு மேலே ஓமப் பொடி தூவி பரிமாறவும்.

* குழந்தைகளுக்கு இந்த சென்னா சாட் மிகவும் பிடிக்கும்.201607180836106039 how to make chana chaat SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button