சைவம்

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாத போது இந்த திடீர் அப்பள குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி
தேவையான பொருட்கள் :

புளி – நெல்லிக்காய் அளவு,
அப்பளம் – 5,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

766309F6 ABE4 431D 8D86 0D8EBD667F3E L styvpf

* நன்றாக கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தை போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்

* சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

* குழம்பு வைக்க காய்கறிகள் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும். செய்வதும் சுலபமானது. 201607201407463744 how to make appalam kuzhambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button