சிற்றுண்டி வகைகள்

ஃபலாஃபெல்

என்னென்ன தேவை?

வெள்ளைக் கொண்டைக்கடலை – 1/4 கிலோ,
பச்சை மிளகாய் – 4,
கொத்தமல்லி – 1 கட்டு (மூன்றையும் ஊற வைத்து உப்பு
சேர்த்து மிகக் கெட்டியாக அரைத்து சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்).

தக்காளி சாஸுக்கு…

தக்காளி – 3 (துருவவும்),
காய்ந்த மிளகாய், பூண்டு – தேவைக்கேற்ப (விழுதாக அரைக்கவும்),
உப்பு – தேவையான அளவு (அனைத்தையும் சேர்த்து அரைத்து,
பின் கொதிக்க வைத்துக் கொள்ளவும்).

எள்ளுப் பச்சடி…

எள் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தயிர் – 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 சிட்டிகை,
கடுகுத் தூள் – 1/2 டீஸ்பூன். (எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்).
மிருதுவான சப்பாத்திகள்,
துருவிய வெங்காயம், அரிந்த கோஸ்,
கொத்தமல்லி – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

முதலில் ‘பிடா பிரெட்’ என்று சொல்லப்படும் மிருது சப்பாத்திக்குள் வெங்காயம், கோஸ் வைத்து, அதன் மேல் ஃபலாஃபெல் உருண்டைகளை வைத்து, பின் தக்காளி சாஸ், பச்சடி வைத்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.sl3672

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button