மருத்துவ குறிப்பு

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

காலைக் கடன் என்பது அனைவருக்கும் மிக சாதரணமாக நடப்பது கிடையாது. சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள், சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் தான் சீராக போகும் என்பார்கள். ஆனால், இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக எந்த பிரச்சனையும் இன்றி கழிந்தால் தான் உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேப் போல, தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்பட்டு வந்தால் உங்கள் உடலிலும், உணவுப் பழக்கத்திலும் எதோ தவறு நடந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதில் என்ன இருக்கிறது என்று எளிதாக இருந்துவிட வேண்டாம். எமிலி என்ற 16 வயது நிரம்பிய ஐரோப்பிய பெண் மலச்சிக்கல் காரணமாக தனது உயிரையே இழந்துள்ளார்….

எமிலி டிட்டெரிங்டன் (Emily Titterington) எமிலி, 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் எனும் பகுதியில் வாழ்ந்து வந்தார். எட்டு வாரங்களாக மலச்சிக்கலின் காரணத்தினால் மலம் கழிக்க முடியாது தவித்து வந்த எமிலி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதயம் செயலிழந்தது

தீராத மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த எமிலிக்கு இதயம் செயலிழந்ததால் தான் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணாம் அந்த தீராத மலச்சிக்கல் தான். இந்த பிரச்சனையால் உடலின் மற்ற பாகங்கள் பெரிதானதாலும், இதய குழி சுருங்கியதாலும் தான் எமிலியின் மரணம் ஏற்பட்டது.

எமிலியின் உடல் நிலை

எமிலி கொஞ்சம் மதி இறக்கம் கொண்டவர் ஆவார். இவருக்கு குடல் பிரச்சனையும் இருந்து வந்தது. கடுமையான வலியும், பிரச்சனையும் இருந்த போதிலும், இதை எல்லாம் அவர் யாரிடமும் வெளிகட்டிக் கொள்ளவில்லை. இதற்கு அவரது மதி இறக்கம் ஓர் காரணமாக இருந்துள்ளது என மருத்துவர் அமன்டா ஜெப்ரி கூறியுள்ளார்.

மலத்தை அடக்கிய எமிலி

குடல் பிரச்சனையால் தீராத வலியில் அவதிப்பட்ட வந்த எமிலி. தினமும் மலம் கழிக்க சென்றும், பாத்ரூமில் வலியின் காரணமாக மலத்தை அடக்கி வைத்திருந்து, கழிக்காமல் வந்திருக்கிறார். இது தான் எமிலியின் மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனை

குழந்தைகள் நலன் மருத்துவரான ராய்னா க்ரோத், பெரும்பாலான குழந்தைகள், மலம் கழிக்காமல் அடக்கி வைத்துக்கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் வலியையும் அவர்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை. இதன் காரணமாக மற்ற உடல் பாகங்களுக்கும் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய எமிலியின் மரணம்

எமிலி சரியான நேரத்தில் அவரது குடல் பிரச்சனையின் காரணத்தினால் ஏற்பட்ட வலி பற்றி தெரியப்பட்டிருந்தால், அவருக்க சரியான சிகிச்சை அளித்து குணப்படுதியிருக்கலாம். இந்நேரம் எமிலி நம்மோடு உயிரோடு இருந்திருப்பார் என்று எமிலியின் உடல்நல மருத்துவர் ஜேம்ஸ் கூறினார்.

மருத்துவரை தவிர்த்து வந்த எமிலி

வீட்டில் பலமுறை மருத்துவரை அணுகவும், மருத்துவமனைக்கு செல்லவும் அழைத்தும் கூட எமிலி மறுத்திருக்கிறார். தனக்கு ஒன்றுமில்லை என்பது போல இருந்திருக்கிறார். குழந்தை மனம் மாறாத பெண் என்பதால் என்னவோ, தன் மனநிலையின் காரணமாகவே மரணமடைந்துவிட்டார்.

பாத்ரூமில் சுயநினைவின்றி இருந்த எமிலி

ஓர் நாள் அதிகாலை 4 மணியளவில் எமிலின் பெற்றோர், எமிலி சுயநினைவின்றி பாத்ரூமில் விழுந்துக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். மற்றும் அவரது வயிறு பகுதி மிகவும் வீங்கிய அளவில் இருந்துள்ளது. மற்றும் கீழ் இடுப்பு பகுதியும், பிறப்புறப்பு எலும்பு பகுதியிலும் வீங்கியிருந்ததை கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு அருகில் இருந்த மருத்துவமனையில் எமிலி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

மருத்துவர்கள் கருத்து

மலச்சிக்கலை மிக எளிதாக எடுத்தக்கொள்ள வேண்டாம். உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் செயல்பாடு தான் இது. இதில் பிரச்சனை ஏற்பட்டால், கழிவுகள் உங்கள் உடலிலேயே தங்கிவிடும். இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மற்றும் மற்ற உடல் பாகங்களையும் இது பாதிக்கும் அபாயம் இருக்கிறது என்று கூறியுள்ளனர். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

13 1436781234 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button