சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்
தேவையான பொருட்கள் :

வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்)
தண்ணீர் – 3/4 குவளை
உப்பு – 1 சிட்டிகை

கோதுமை மாவு தயாரிக்கும் முறை:

* வாணலியில் கோதுமையை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேலும் சற்று நேரத்தில் கோதுமை வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது வறுத்த கோதுமையை அகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். பிறகு மாவு மில்லில் அரைத்து வந்து சலித்து, காற்று புகாதவாறு பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும். இந்த மாவை இடியாப்பம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யவும் பயன்படுத்தலாம்.

இடியாப்பம் செய்முறை :

* ஒரு அகன்ற பாத்திரத்தில், தேவையான அளவு மாவுடன் உப்பு போட்டு விரல்களால் கலக்கவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஆனால் கையில் ஒட்டக் கூடாது.

* இந்தப் பதத்திற்கு வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டின் மேல் பிழியவும். பிறகு அந்தத் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 8 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான கோதுமை இடியாப்பம் ரெடி.

* சாப்பிடும் பொழுது நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல், சில துளிகள் நல்லெண்ணைய் (விருப்பப்பட்டால் மட்டும்) ஊற்றி, நன்றாகப் பிசைந்து சாப்பிடவும்.

குறிப்பு :

வெறும் இடியாப்பம் செய்து அதில் இனிப்பைக் கலந்து சாப்பிடுவதற்கு பதில், கோதுமை மாவில் வெல்லப்பாவை ஊற்றி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை அச்சில் வைத்துப் பிழிந்து, இனிப்பு இடியாப்பமாக செய்து சாப்பிடலாம்.

இதே இனிப்பு மாவில் சிறிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளைக் கலந்து, கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.201609201058555613 how to make wheat idiyappam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button