கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்

இன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது.

20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக்கின்றனர் டாக்டர்கள். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும்.

அவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. சிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகுநேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது. மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம்.

களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது. சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். அல்லது, வாக்மேனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.pregnant woman walking

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button