சைவம்

ஓமம் குழம்பு

தேவையான பொருட்கள் :
புளி – எலுமிச்சை பழ அளவு
வறுத்து அரைக்க :
ஓமம் – 2 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்த்த மிளகாய் – 2
மிளகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
வெல்லம் – சுண்டைக்காய் அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவைக்கு
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
omam
செய்முறை :
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டிய பொருட்களை கொட்டி வறுத்து அரைத்து கொள்ளவும்.
* மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை கொட்டி தாளிக்கவும்.
* அடுத்து அதில் புளியை கரைத்து கொட்டவும். உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும், வறுத்துவைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* பின்பு அதில் வெல்லத்தை கலந்து கொள்ளவும்.
* சத்தான ஓமம் குழம்பு ரெடி.
* சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். உணவு நன்கு ஜீரணமாகும்.,omam

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button