கர்ப்பிணி பெண்களுக்கு

வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும்.

வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும். அந்த அறிகுறிகள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

50 சதவீத கர்ப்பிணிகள் கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் வாந்தி அல்லது குமட்டலை சந்திப்பார்கள். ஆனால் அது சொல்ல முடியாத அளவில் அதிகமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் வயிற்றில் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக பல கணிப்புக்களில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் அப்படி அதிகரிக்கும் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது இரட்டைக் குழந்தை வயிற்றில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

AFP (ஆல்பாஃபெடோபுரோட்டீன்) என்பது கர்ப்பிணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு இரத்த பரிசோதனை. இது கர்ப்பத்தின் இரண்டாம் மூன்று மாத காலத்தின் போது மேற்கொள்ளப்படும் சோதனையாகும். இந்த சோதனையின் போது, குழந்தைக்கு பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். இந்த சோதனையின் போது இரட்டைக் குழந்தைகள் வயிற்றில் இருந்தால், அசாதாரணமாக அதிகம் இருப்பதாக முடிவு வரும்.

வயிற்றில் சிசுவின் அசைவை மிகவும் வேமாக ஒரு தாய் உணர்ந்தால், அது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர் என்பதைக் குறிக்கும்.

இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்த நிறைய அனுபவமிக்க பெண்கள் கூறும் ஓர் பொதுவான பிரச்சனை தான் அளவுக்கு அதிகமான களைப்பு. அதுவும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் கடுமையான களைப்பை அனுபவிப்பார்கள்.

பல காரணங்களுக்காக மருத்துவர்கள் ஹெச்.சி.ஜீ அளவுகளைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஹெச்.சி.ஜீ என்னும் ஹார்மோன் பெண்களின் இரத்தம் அல்லது சிறுநீரில் உள்ளது. கருத்தரித்த 10 நாட்கள் கழித்து இச்சோதனையை சோதிக்கும் போது, அளவுக்கு அதிகமாக ஹெச்.சி.ஜீ அளவுகள் இருந்தால், இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறியலாம்.201611111342594500 twins pregnancy symptoms SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button