சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா

குழந்தைகளுக்கு கேரமல் பிரை பனானா மிகவும் பிடிக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

குழந்தைகளுக்கான கேரமல் பிரை பனானா
தேவையான பொருட்கள் :

மிகவும் பழுக்காத வாழைப்பழம் – 2
மைதா மாவு – அரை கப்
சோள மாவு – கால் கப்
சர்க்கரை – அரை கப்
எள் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க


செய்முறை :

* மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

* வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.

* பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டெடுத்து, பரிமாறவும்.

* விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.201611120958161231 caramel fried caramel fried banana SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button