சிற்றுண்டி வகைகள்

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு

அரிசி மாவுடன் உளுந்தம் மாவு சேர்த்து புட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இந்த புட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு
தேவையான பொருள்கள் :

அரிசி மாவு (வறுத்தது) – 2 கப்
உளுந்தம் மாவு (வறுத்தது) – அரை கப்
தண்ணீர் (கொதித்தது) – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – தேவையான அளவு(விரும்பினால்)

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுந்தம் மாவு, வறுத்த அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

* அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

* குழைத்த மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும். அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

* புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

* தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் குழைத்த மாவை போடவும். அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் குழைத்த மாவை போடவும். அதன் பின்பு தேங்காய் பூவை போடவும். இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை குழைத்த மாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.

* குழைத்த மாவு நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் வேக விடவும்.

* புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

* இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.

* அவித்த புட்டுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து பரிமாறவும்.

* இப்போது சுவையான உளுந்தம்மாவு புட்டு ரெடி.201612010859134636 Urad flour puttu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button