சிற்றுண்டி வகைகள்

சுவையான ஓட்ஸ் மிளகு அடை

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது ஓட்ஸ் மிளகு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான ஓட்ஸ் மிளகு அடை
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – கால் கிலோ
ஓட்ஸ் – 1 கப்
கடலைப்பருப்பு – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 25
தேங்காய் துருவல் – கால் கப்
பெருங்காயத்தூள் – சுண்டைக்காய் அளவு
கல் உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஓட்ஸை வறுத்து பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு இஞ்சி சேர்த்து கொரக்கொரப்பாக அரைக்கவும்.

* கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.

* அரைத்த மாவில் பொடித்த ஓட்ஸ், உப்பு போட்டு கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் போட்டு தாளித்ததும் மிளகு, சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும். அனைத்தும் பொரிந்ததும் தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

* வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் மாவை 2 குழிக்கரண்டி அளவு ஊற்றி, நடுவில் கரண்டியை வைத்து அழுத்திவிடவும். அடை தடியாக இருப்பதால் அடிபிடித்து விடாமல் இருக்க தீயை குறைத்து வைத்து மூடிபோட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.

* 3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். திருப்பி போட்ட பின் மூடவேண்டாம். மேலும் 3 நிமிடங்கள் கழித்து வாணலியில் இருந்து எடுத்துவிடவும்.

* சுவையான ஓட்ஸ் மிளகு அடை தயார். 201612101314181068 oats pepper adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button