ஆரோக்கியம் குறிப்புகள்

சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு நன்மை விளைவிக்குமா? தெரிஞ்சிக்கங்க…

சூரிய காந்தி எண்ணெய் உடலுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் விதைகள் குறைந்த கொழுப்புச்சத்தைக் கொண்டவை. இதயத்தில் எவ்வித அடைப்பும் உண்டாக்காது. இயற்கையாகவே 40 முதல் 43% வரையிலான எண்ணெயை தன்னுள் அடக்கியிருக்கும் சூரியகாந்தி விதையில், நம் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே சூரியகாந்தி விதையின் எண்ணெய் சமையலில் முக்கியப் பங்களிக்கிறது.

சூரியகாந்தியின் விதைகள் நார்ச்சத்து கொண்டதால் ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்விதைகள் மன அழுத்தத்தை விளைவிக்கும் கார்டிசால் ஹார்மோனைக் குறைப்பதால், இரவில் நிம்மதியான தூக்கத்தை உண்டாக்கும். கெட்ட கொழுப்புகளைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும் இதன் விதைகள், புரதச் சத்தையும் தருகிறது.

சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் இ அதிகமாக இருப்பதால், யு.வி. கதிர்களால் தசைச் செல்கள் பாதிப்படையாமல் காக்கும். நமக்கு ஏற்படும் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கும். வைட்டமின் இ மட்டுமில்லாமல் வைட்டமின் ஏ, சி மற்றும் டி அடங்கிய சூரியகாந்தி எண்ணெய் முகப்பருக்களையும், சேதமடைந்த தோலையும், வயதான அறிகுறிகளைச் சரிசெய்யவும் உதவியாக இருக்கிறது. இது தவிர, இதயப் பிரச்னை மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறது, ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.

சூரியகாந்தி உற்பத்தி
1970 மற்றும் 80 களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெருமளவில் சூரியகாந்தி, சோயா போன்றவை உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றை சந்தைப்படுத்த இந்தியா போன்ற வளரும் நாடுகள் தேவைப்பட்டன. எனவே இங்கு பாரம்பரியமாக உபயோகித்துவந்த கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை கெடுதல் என விளம்பரம் செய்யப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்கபட்டது. அதிக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உபயோகிப்பது ஊக்குவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சூரியகாந்தி எண்ணெய் எல்லாமே சூரியகாந்திப் பூக்களில் இருந்து மட்டுமே பெறப்படுவதில்லை. இது பல வேதிபொருட்களின் கலப்படமாக இருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு மிக நல்லது என்று வலியுறுத்தும் எண்ணெய் நிறுவனங்கள் சூரியகாந்தியின் உற்பத்தி அளவை எப்போதும் சொல்வதில்லை. காரணம் சூரியகாந்தி எண்ணையின் உற்பத்தி செய்யும் அளவை விட மிக மிக குறைந்த அளவே சூரிய காந்தி பூக்கள் பயிரிடப்படுகின்றன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் கடந்த ஓராண்டாக உலக அளவில் சூரியகாந்தி உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது. நம் ஊரில் ஒரு கிலோ சூரியகாந்தி விதை 250 ரூபாய்க்கு மேல். ஒரு கிலோ விதையில் இருந்து 700ml மட்டுமே எண்ணேய் எடுக்க முடியும். அதில் இருந்து எண்ணெய் எடுத்தால் லிட்டர் 300 ரூபாய்க்கு மேல் விற்கவேண்டும். ஆனால் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு எப்படி விற்கிறார்கள் என சிந்தித்தது உண்டா.

கலப்பட எண்ணெய்
பாமாயிலை சில கெமிக்கல்கள் சேர்த்து சுத்திகரித்து பெறப்படும் எண்ணெய் ‘சூப்பர் ஒலின்’ எனப்படுகிறது. இந்த எண்ணெய் நீர் போல இருக்கும். நீர் போல இருக்கும் இந்த எண்ணையை எந்த எண்ணையுடன் கலந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

அதே போல பருத்தியில் இருந்து எடுக்கப்படும் ‘காட்டன் ஸீட் ஆயிலும்’ எந்த எண்ணெயிலும் கலக்கமுடியும்.
இன்று நீங்கள் வாங்கும் எந்த சூரியகாந்தி எண்ணெயிலும் 80 சதவீதம் சூப்பர் ஒலின் , காட்டன் ஆயில் , சோயா எண்ணெய் போன்றவையும் 20 சதவீதம் அளவிற்கே சன்பிளவர் ஆயிலும் இருக்கும். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் சன்பிளவர் ஆயில் சிறந்ததா என்று.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button