சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

பச்சை பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
கொத்தமல்லித் தழை – அரை கட்டு,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
நெய் – எண்ணெய் கலவை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 மணி நேரம் ஊற விடவும்.

* வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

* பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து அதை கிண்ணம் போல் செய்து அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்திகளாக தேய்க்கவும்.

* தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் – எண்ணெய் கலவையை ஊற்றி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.201612281300156871 Green peas stuffed chapati SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button