சைவம்

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி

பாலக் கீரையுடன் வெஜிடபிள் சேர்த்து கிரேவி செய்யலாம். இப்போது சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி
தேவையான பொருட்கள் :

கேரட் – 1
பீன்ஸ் – 10
காலிபிளவர் – சிறிது
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 2
பாலக்கீரை – 1/2 கட்டு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை :

* பாலக்கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கேரட், பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், பூண்டு, இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.

* வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிபிளவர் முதலியவற்றைப் போட்டுக் கிளறவும்.

* அதன் பின் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.

* கடைசியாக அரைத்து வைத்துள்ள பாலக் கீரை, உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் போட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கரை திறந்து கஸ்தூரி மேத்தியைப் போட்டு நெய் ஊற்றிக் கிளறி பரிமாறவும்.

* சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி ரெடி.201701031032572542 palak vegetable curry SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button