கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தை சிவப்பாக பிறக்க குங்குமப்பூ அவசியமா?!

கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை. ஆனால், உண்மையாகவே குங்குமப்பூ அந்த மேஜிக்கை செய்ய வல்லதா?! குங்குமப் பூவை சாப்பிடுவதால் கிடைக்கப்பெறும் பிற பலன்கள் என்ன? கம்பத்தை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரஷிதா பானுவிடம் பேசினோம்.

* பிறக்கும் குழந்தையின் நிறத்தை நிர்ணயிப்பதில், பெற்றோர்களின் ஜீன்களுக்கே முக்கியப் பங்குண்டு.

* குங்குமப் பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

குங்குமப் பூ பலன்

* கர்ப்பிணிகள் என்றில்லை, அனைவருமே குங்குமப்பூவை பொடித்து வைத்துக்கொண்டு அதை தினமும் இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பாலில் கலந்து அருந்தலாம். அதற்கு முன், அவரவரின் உடல்நிலைக்கு குங்குமப் பூ தேவையா, தேவையில்லையா என்பது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

* சளி தொல்லை உள்ளவர்கள் குங்குமப்பூவை எடுத்துக் கொள்ளும்போது அது சளித் தொந்தரவு நிவாரணியாகச் செயல்படும்.

* ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி குங்குமப் பூவுக்கு உண்டு. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, இயல்பாக சருமத்தின் நிறத்தில் மாற்றம் நிகழலாம். ஆனால் சிவப்பழகு பெற வாய்ப்பில்லை.”

k2 16544

கர்பிணி

குங்குமப்பூவைப் பற்றி, சோளிங்கரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் நிர்மலா என்ன சொல்கிறார். அவரிடமே கேட்டோம்.

* குங்குமப் பூ… கர்ப்பப்பைக்கு சிறப்பான ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் .

* வாயுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும்.

* கண்களுக்கு நல்ல ஒளி-யைக் கொடுப்பதுடன் முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.

* ஆஸ்துமா, சளித்தொல்லை, இருமல் உள்ளவர்களுக்கு குங்குமப்பூ நல்ல நிவாரணி.

* குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

* குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மன அழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க, குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்றபடி குங்குமப்பூவுக்கு நிறத்துக்கும் எப்போதும் சம்பந்தம் கிடையாது".

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button