சிற்றுண்டி வகைகள்

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

சர்க்கரை நோயாளிகள் இந்த கோதுமை ரவை பொங்கலை சாப்பிடலாம். பொங்கலுக்கு சூப்பரான கோதுமை ரவை இனிப்பு பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் பொடித்தது – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
முந்திரி பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

* வாணலியில் கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

* வறுத்த ரவை, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வடிகட்டிய வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும். இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

* சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.201701121517369410 wheat rava sweet pongal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button