சிற்றுண்டி வகைகள்

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்

தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

பொங்கல் ஸ்பெஷல்: சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 2 டேபுள் ஸ்பூன்
பால் – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
நெய் – 100 கிராம்
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
காய்ந்த திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய் – 3 பொடி செய்தது

செய்முறை :

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

* அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.

* அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.

* திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

* சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.201701131513109695 sakkarai pongal Sweet Pongal Jaggery Pongal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button