சைவம்

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி

சிறுதானியம், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை, முருங்கைக்கீரை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

திணை மாவு – 2 கப்
முருங்கைக்கீரை – 1 கட்டு
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில், திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை என அனைத்தையும் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* பின்னர் அந்த மாவை உருண்டையாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, சுற்றி சிறது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி ரெடி!201701221204305503 thinai keerai chapathi thinai Murungai keerai chapathi SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button