ஆண்களுக்கு

ஆண்களே! நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் உங்க தலையை பிசுபிசுன்னு ஆக்குது தெரியுமா?

ஆண்களிடம் இருக்கும் ஓர் பழக்கம் அடிக்கடி தலையை சரிசெய்து கொள்வது. கண்ணாடியைப் பார்த்தால் ஆண்களின் கை தலைக்கு செல்லாமல் இருக்காது. இதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால் இச்செயல் தலைமுடியை பிசுபிசுப்பாக்கும் என்பது தெரியுமா?

இதுப்போன்று ஏராளமான நமது செயல்கள் நம் தலைமுடியில் எண்ணெய் பசையை அதிகமாக்கி, பிசுபிசுவென்று மாற்றுகிறது. இங்கு தலையில் பிசுபிசுப்பை அதிகமாக்கும் சில பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அந்த தவறுகளை சரிசெய்து கொண்டால், தலையின் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம்.

சுடுநீரில் குளிப்பது
குளிர்காலத்தில் தலைக்கு குளிர்ச்சியான நீரில் குளிப்பது என்பது கடினம். ஆனால் சுடுநீரில் குளித்தால் மயிர்கால்கள் பாதிக்கப்படும். மேலும் சுடுநீர் ஸ்கால்ப்பை அதிகமாக வறட்சி அடையச் செய்து, எண்ணெய் சுரப்பியில் இருந்து அதிகளவு எண்ணெயை உற்பத்தி செய்யும்.

தினமும் தலைக்கு குளிப்பது
ஸ்கால்ப் சுத்தமாக இருக்க தினமும் தலைக்கு குளிப்பது நல்லது தான். ஆனால் இப்படி தினமும் தலைக்கு குளித்தால், ஸ்கால்ப் வறட்சியடைந்து, தலையை எப்போதும் பிசுபிசுவென்று வைத்துக் கொள்ளும்.

கண்டிஷனர் பயன்படுத்துவது
கண்டிஷனர் என்பது தலைமுடிக்கு தான். அது சிறிது ஸ்கால்ப்பில் பட்டாலும், அதனால் ஸ்கால்ப்பில் எண்ணெய் பசை அதிகரித்து, பிசுபிசுவென்று தான் இருக்கும். எனவே கண்டிஷனர் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

ஸ்டைலிங் பொருட்கள்
தலைமுடியை ஸ்டைல் செய்வதற்கு அதற்கான பொருட்களைப் பயன்படுத்த நன்றாக இருக்கும். ஆனால் அதில் கெமிக்கல்கள் அதிகம் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் தலைமுடி பாதிக்கப்படுவதோடு, தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும்.

அழுக்கான சீப்புகள்
சீப்புக்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, இதுவரை தலைக்கு தடவிய எண்ணெய் சீப்புக்களிலேயே தங்கி, அழுக்குகளை தேக்கி, தலையை பிசுபிசுப்பாகவே வைத்துக் கொள்ளும். எனவே அடிக்கடி சீப்பை சுத்தம் செய்யுங்கள்.

அடிக்கடி தலையில் கை வைப்பது
ஆண்களுக்கு இருக்கும் பழக்கங்களுள் பொதுவான ஒன்று தான் இது. அடிக்கடி தலையில் வைத்தால், கையில் உள்ள வியர்வை தலைக்கு சென்று, ஸ்கால்ப்பை எண்ணெய் பசையுடன் வைத்துக் கொள்ளும்.how to get rid of oily face for men 22 1477111357

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button