சிற்றுண்டி வகைகள்

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

மிகவும் சுலபமாக செய்யக்கூடியது திரட்டு பால். இதன் சுவை அபாரமாக இருக்கும். இப்போது இந்த திரட்டுப்பாலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

வெண்ணை நிறைந்த பால் (full cream milk) – 1 லிட்டர்
நெய் – 10௦ கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலப்பொடி – சிறிதளவு (வேண்டுமானால்)

செய்முறை :

* ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.

* அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கும். பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

* பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும்.

* சிம்மில் வைத்து நன்றாக கிளறனும். திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்.

* அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.

* தித்திப்பான திரட்டிப்பால் ரெடி….

குறிப்பு :

* பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம்.

* திரட்டுப்பால் செய்யும் போது அடிக்கடி பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.201701301525374367 how to make thirattupal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button