தலைமுடி சிகிச்சை

பட்டு போன்ற கூந்தல் பெற இந்த காய்கறி மாஸ்க் யூஸ் பண்ணுங்க!!

கூந்தல் வளர தலைமுடியில் என்ன பிரச்சனை என அறிந்திருக்க வேண்டும். பொடுகு, வறட்சி, அதிக எண்ணெய்ப் படை ஆகியவை கூந்தள் வளர விடாது.

ஆகவே முதலில் பொடுகு போன்ற பிரச்சனைகளை போக்கி, அதன் பின் கூந்தலுக்கு ஊட்டம் அளித்தால் நன்றாக கூந்தல் செழித்து வளரும்.

இங்கே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை தவறாமல் உபயோகித்து பாருங்கள். கூந்தல் வளர்ச்சியை தூண்டி நீளமக வளரச் செய்யும்.

பொடுகு தொல்லைக்கு :
இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும்.
இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை நின்றுவிடும்.

ஷாம்பு உபயோகிக்கும்போது :
நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் ஷாம்புவில் இருக்கும் ரசாயனங்கள் தலைமுடியை பாதிக்காது. அதோடு முடி உத்ர்தலும் நிற்கும்.

தலைமுடிக்கு பொஷாக்கு :
விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும்.
ஒரு சுத்தமான துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும்.
சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்கும்.

ஹெர்பல் ஷாம்பு :
ஒரு கப் சீகைக்காய், வெந்தயம் கல் கப் பச்சைப்பயறு அரை கப், ஆகியவற்றை எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடி உதிர்தல் நின்று அடர்த்தியாக வளரும்.

காய்கறி மாஸ்க்
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் ஒரு கப் அளவிற்கு பொடிப் பொடியாக நறுக்கி அதை இரவு முழுவதும் ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
செம்பு இல்லையென்றால் இரும்பு பாத்திரம் நல்லது. இந்த கலவை பிழிந்தால் வரும் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும்.
சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக மாறும்

15 1476513376 shampoo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button