சிற்றுண்டி வகைகள்

கோதுமை ரவை வெங்காய தோசை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை ரவை வெங்காய தோசை
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்
தோசை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தோசை மாவில், கோதுமை ரவையை போட்டு சிறிது உப்பு, வெங்காயம், ப.மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 1 மணிநேரம் வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான கோதுமை ரவை வெங்காய தோசை ரெடி.

குறிப்பு :

இந்த தோசைக்கு சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.201702091053401404 Wheat semolina onion dosa SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button