கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப கால அழகுக்கு ஈடு உண்டோ!

தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும்

ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சிலபல மாறுதல்களைக் காட்டத் தவறுவதில்லை. தாய்மை தரும் அழகு ஒரு பக்கம்
இருந்தாலும், கர்ப்ப காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கர்ப்பிணிகள் செய்து கொள்ளக்கூடிய, தவிர்க்க வேண்டிய அழகு சிகிச்சைகள் பற்றிப் பேசுகிறார் ‘டியூ டிராப்ஸ்’ வசந்தி. ”மெலிந்திருந்த இடை பருத்து,
உடல் முழுக்க பூசின மாதிரி ஒரு பூரிப்பு உண்டாகும். நகங்களும் கூந்தலும் வழக்கத்தைவிட நீளமாக வளரும். இது எல்லாமே கர்ப்பிணிக்குத் தனி
அழகைக் கொடுக்கும். கர்ப்பமாக இருக்கும்போது, சில பெண்கள், புருவங்களைக்கூட ஷேப் செய்ய பயந்து கொண்டு, எந்த அழகு சிகிச்சையும் வேண்டாம் என ஒதுங்கியிருப்பார்கள். இன்னும் சிலருக்கோ, பார்லர் போகாமல் இருக்கவே முடியாது. மற்ற நாள்களில் எப்படியோ… கர்ப்பமாக இருக்கும் போது செய்து கொள்கிற ஒவ்வொரு அழகு சிகிச்சையிலும் அதீத எச்சரிக்கை அவசியம்” என்கிற வசந்தி, சில அவசிய சிகிச்சைகளைப் பட்டியலிடுகிறார்.

கூந்தல்

கூந்தல் அடர்த்தியாக, அழகாக வளரும் என்பதால், இந்தக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புதிய ஹேர் ஸ்டைல், புதிய ஹேர் கட்டை முயற்சி செய்யலாம்.தலை முழுக்க கலரிங் செய்வதைத் தவிர்த்து, ‘ஹைலைட்ஸ்’ எனப்படுவதைச் செய்து கொள்ளலாம். அதாவது கூந்தலின் சில பகுதிகளை
மட்டும் கலரிங் செய்வது. இதற்கு உபயோகப்படுத்தப்படுகிற பொருள்கள் எதுவும் ஆபத்தற்றவை. மண்டைப்பகுதிக்குள் ஊடுருவாதவை. அதே நேரம், பெர்மிங், ஸ்ட்ரெயிட்டனிங் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சிகிச்சைகளில் கெமிக்கல்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. தவிர, கர்ப்பத்தின் போது ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும், இந்த சிகிச்சைகளை பாதிக்கலாம். அதன் விளைவாக எதிர்பார்த்த பலன் கிடைக்காமல், கூந்தலின் அழகே மாறிப் போகும். மட்டுமின்றி, இந்த சிகிச்சைகள் கூந்தலின் நீளம், அடர்த்தியைப் பொறுத்து 4 முதல் 6 மணி நேரம் எடுப்பவை என்பதால், கர்ப்பிணிகளுக்கு முதுகுவலியை ஏற்படுத்தலாம். ஆயில் மசாஜ் செய்து கொள்வது, கர்ப்பிணிகளுக்கு இதமாக இருக்கும்.

கூந்தலுக்கும் நல்லது. பாட்டி காலத்து எண்ணெய் குளியல்தான்… பார்லர் போக முடியாதவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். எண்ணெய்
குளியல் பிடிக்காதவர்கள், அதன் இன்றைய நவீன வடிவமான ஸ்பா சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். அதன் வாசனையும், மென்மையான மசாஜும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஸ்பா என்பது தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை, கெமிக்கல் கலப்பில்லை என்பதால், அதில் பக்க விளைவுகளும் இருக்காது.
ld1529

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button