சைவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

சாமை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவு. இது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தி வராமலும் தடுக்கிறது. சாமை அரிசியில் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – கால் கப்
மிளகுதூள் – 2 தேக்கரண்டி
கேரட், பீன்ஸ் நறுக்கியது – 1 கப்
பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 2
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிககொள்ளவும்.

* சாமை அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

* கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி, மிளகுதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகளை நின்றாக வதக்கிய பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும்.

* காய்கறிகள் வெந்த பின் அதனுடன் சாமை அரிசியை சேர்த்து, தேங்காய் பாலை அதில் ஊற்றி குக்கரை மூடி விசில் போடாமல் 15 நிமிடம் குறைந்த அனலில் வேகவிடவும்.

* வெந்த பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

* சுவையான சாமை அரிசி புலாவ் தயார்.201702221122483497 samai rice pulao SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button