சிற்றுண்டி வகைகள்

சுவையான ஆனியன் வரகரிசி அடை

உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஆனியன் வரகரிசி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான ஆனியன் வரகரிசி அடை
தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
பாசிபருப்பு – முக்கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு -அரை கப்
மிளகாய் வற்றல் – 5
கறிவேப்பிலை – 1 பிடி
கல் உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிது

அடை வார்க்க :

எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப
வெங்காயம் – 2
கொத்துமல்லி – தழை

செய்முறை :

* வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.

* வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.

* சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.201702241114385212 varagu rice onion adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button