28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
p51c
இனிப்பு வகைகள்

நுங்குப் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – அரை கப், இளசான நுங்கு – 5, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை அரைத்து, கெட்டிப்பாலாக எடுத்து மாவில் கலந்துகொள்ளவும். நுங்கை தோலுரித்து பொடியாக நறுக்கவும். இத்துடன் துருவிய வெல்லம், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலக்கி, தனியாக வைக்கவும்.

பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். மாவுக் கலவையில் ஒரு ஸ்பூன் எடுத்து ஊற்றி, அதன் மேல் நுங்கு – வெல்லக் கலவையை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். மீண்டும் அதன் மேல் மாவுக் கலவையை ஒரு ஸ்பூன் ஊற்றவும். இருபுறமும் திருப்பிப் போட்டு சிவக்க எடுத்து, சூடாகப் பரிமாறவும்.p51c

Related posts

சுவையான மைதா மில்க் பர்பி

nathan

தேன் மிட்டாய்

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan

தேங்காய் பர்பி

nathan

விளாம்பழ அல்வா

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

சுவையான ஜவ்வரிசி போண்டா!! செய்வது எப்படி!!

nathan

தேங்காய் பர்ஃபி

nathan