மருத்துவ குறிப்பு

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செல்போனை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம்.

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை ஸ்மார்ட் போனை கையில் வைத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும்போது, உலகின் வலிமையான தலைவர்களான அமெரிக்க அதிபருக்கும், இங்கிலாந்து பிரதமருக்கும் அந்த கொடுப்பினைகள் இல்லை.

என்னதான் ஆட்சி அதிகாரமெல்லாம் இருந்தாலும் ஸ்மார்ட் போன் உபயோகிக்க மட்டும் எப்போதும் நோதான். இவர்களுக்கென்று என்கிரிப்ட் செய்யப்பட்ட பிளாக்பெரி போன் வழங்கப்படும். இதில் இன்டர்நெட்டோ, வீடியோவோ, இசையோ கேட்க முடியாது. வெறுமனே பேச மட்டும்தான் முடியும். பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு.

அட, அவர்கள் மட்டும்தான் போனை என்கிரிப்ட் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியுமா. நம்மால் முடியாதா என்று கேட்பவர்களுக்கு பதில், முடியும். நாமே கூட நமது செல்போனை எளிதாக என்கிரிப்ட் செய்யலாம். செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் ஆப்சனுக்குக் கீழ் அல்லது செக்யூரிட்டியில் சென்றால் என்கிரிப்ட் என்ற வசதி இருக்கும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் டிகிரிப்ட் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நமது போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது. நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செல்போனை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம். 201703230822510273 Tips to keep safe cell phone SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button