ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…காலையில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

புதிதாக தொடங்கும் ஒரு நாளை சிறப்பானதாக மாற்ற அந்த நாளின் காலை நேரத்தினை எவ்வாறு தொடங்குகின்றோம் என்பதை பொறுத்தே அமைகின்றது.

நாம் முதல்நாள் இரவு சற்று சீக்கிரமே உறங்கச்சென்றால் காலையில் எழும்பும் போது எந்தவொரு சோர்வும் இல்லாமல், சீக்கிரமாகவே எழும்பலாம்.

அவ்வாறு இல்லாமல் இரவில் தாமதாக படுத்துவிட்டு காலையில் தாமதமாக எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு இறுதியில் சாப்பிட நேரம் இல்லாமல் பலர் தமது பணியைத் தொடங்குகின்றனர்.

ஆனால் அவ்வாறு இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும். காலையில் ஒரு 10 நிமிடம் விரைவாக எழுந்திருந்து வேலைகளை முடித்து சாப்பிட்டுவிட வேண்டும்.

இப்படி காலை உணவுகளை தவிர்ப்பது நமது மனநிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எப்போதும் நாம் மன அழுத்தத்துடன் இருக்க ஒரு முக்கிய காரணம் காலை உணவை தவிர்ப்பது தான் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக நீங்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது காலையில் விரைவாக எழுந்திருப்பது தான்.

உங்களின் காலை பழக்கத்திற்கும், மன நலத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்புண்டு. நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவானது நமது குடல் ஆரோக்கியத்தின் செயல்பாடுகளுக்கு உதவும். நமது வயிறு மகிழ்வாக இருந்தால் தான், நமது மூளை நமக்கு நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

மேலும் காலை உணவை தவிர்ப்பது நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்களின் (உடல் உறுப்புகளின் செயல்திறனை இயக்க உதவும்) இயக்கத்தையும் பாதிக்கும்.

புத்தக வாசிப்பு
சிறப்பான காலை நேரத்தை உருவாக்க சில முக்கிய பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டுமாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதில் முக்கியமான ஒன்று புத்தக வாசிப்பு, உங்கள் நாளை புத்தகத்தோடு தொடங்கினால் உங்களின் மூளை சிறப்பாக செயல்படும். மேலும் எல்லா வேலைகளிலும் உங்களால் முழு கவனத்தை செலுத்த முடியும் என்கின்றனர்.

இயற்கையுடன் வாழ்தல்
காலை நேரத்தில் இயற்கையுடன் ஒன்றினைவது உங்களது மனதிற்கு மிகுந்த அமைதியையும், ஒரு உற்சாகத்தினையும் ஏற்படுத்தும். இதனால் காலையில் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் ஆரோக்கியமான மனநிலை உண்டாகும்.

தியானமும் இசையும்
தியானம், மற்றும் பிடித்த பாடல்களை கேட்பது உங்கள் உளவியல் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றதாம். இது உங்களின் முழு நாளுக்கான உத்வேகத்தை தரும் என மனநல நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button