எடை குறைய

எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஃபிட்னஸ் என்ன எடைஅழகே! சீசன் 3

பருமனாக இருக்கும் எல்லோருக்கும் அதிகப்படியான எடையைக் குறைக்க வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும். விருப்பம் இருந்தாலும் வழி தெரியாமல்தான் பலரும் தவிக்கிறார்கள். எடைக் குறைக்க உதவும் என யார், என்ன சொன்னாலும், தானும் அதைப் பின்பற்றிப் பார்க்க நினைக்கிறார்கள். எடை குறைப்புக்கான வழிகளும் சிகிச்சைகளும் எல்லோருக்கும் பொதுவானவை அல்ல. அது அவரவர் உடல்வாகு, பருமன் அளவு, ஆரோக்கியம், வாழ்க்கை முறை எனப் பலதும் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு உதவுகிற டெக்னிக் இன்னொருவருக்கு பயனற்றுப் போகலாம். இந்த அடிப்படையைப் புரிய வைத்து ஒவ்வொருவருக்குமான பிரத்யேக எடைக் குறைப்புத் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்து, ஆரம்பம் முதல் இலக்கை எட்டும் வரை கூடவே இருந்து வழிகாட்டுவதுதான் `என்ன எடை அழகே’ நிகழ்வின் சிறப்பே.

‘எடை குறைப்பது நடக்காத காரியம்’ என நினைத்து தாழ்வு மனப்பான்மையில் இருந்த தோழிகளுக்கு ‘முறையான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எடைக் குறைப்பு என்பது எளிதானதே’என நிரூபித்து தன்னம்பிக்கையுடன் வலம்வரச் செய்தார் ‘தி பாடி ஃபோகஸ்’உரிமையாளரும், டயட்டீஷியனுமான அம்பிகா சேகர். இதோ இப்போது தொடங்கியுள்ள ‘என்ன எடை அழகே சீசன் 3’பங்கேற்பாளர்கள் 9 பேருக்கும் அப்படித்தான் பிரத்யேக எடைக் குறைப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீசன் 3 தேர்வாளர்கள் 9 பேர்களைப் பற்றிய பின்னணி விவரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். எடை அதிகரிப்புக்கான தனிப்பட்ட காரணங்களையும் பார்த்தோம். அதன்படி அவர்களுக்கான உணவு ஆலோசனை மற்றும் சிகிச்சை முறைகளைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் அம்பிகா சேகர்…

சுப்ரியா இவரது பிரச்னையே தளர்ந்து போன தசைகள்தான். அந்தத் தசைகளை இறுகச் செய்தாலே உடல் சரியான வடிவத்துக்கு வரும். அதைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக இவருக்கு ஐசோமெட்ரிக் மற்றும் ஐசோடோனிக் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

சசிரேகா எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை வரை முயன்று தோற்றவர் இவர். ஒட்டுமொத்த உடல் முழுவதும் இவருக்கு கொழுப்பு உள்ளதாலும் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவையைக் கருத்தில் கொண்டும் மிக கவனமாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. டிரெட்மில்லில் 5 கிலோமீட்டர் ஓடச் செய்வதே முதல்கட்டமாக அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

இந்துமதி இடுப்புப் பகுதியைச் சுற்றிலும் அதிகப்படியான சதை இருப்பதே இவரது பிரச்னை. EFX என்கிற ஜிம் உடற்பயிற்சிக் கருவியின் உதவியுடன் இவருக்கு உடல் முழுவதற்குமான பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதன் விளைவாக இடுப்புப் பகுதியிலும் பருமன் குறையும்.

உதயசூர்யா மற்றும் ராதா இவர்கள் இருவருக்குமே உடலில் கெட்ட நீரின் அளவு அதிகமாக இருக்கிறது. Full Body Cello Therapy என்கிற சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கச் செய்யப்படும். அதனால் உடலில் உள்ள கெட்ட நீரெல்லாம் வியர்வை மாதிரி வெளியேறும். அதன் விளைவாக உடலின் வளர்சிதை மாற்ற இயக்கம் ஒழுங்காகும். வளர்சிதை மாற்றம் சீரடைந்தாலே எடைக் குறைப்பும் எளிதாகும்.

கீதா செலுலைட்டிஸ் என்பது ஒருவகை கெட்டிக் கொழுப்பு. உடலின் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்து கல் மாதிரி உறுதியாகி இருக்கும். பெரும்பாலும் இத்தகைய கொழுப்பு பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடைகளில்தான் அதிகம் சேரும். அதாவது, தர்பூசணிப் பழத்தைப் பாதியாக வெட்டி, தொடைப் பகுதியில் ஒட்ட வைத்தது போன்ற தோற்றத்தைத் தரும். கீதாவுக்கு கைகளில் செலுலைட்டிஸ் அதிகம். அதனால், அவருக்கு அந்த இடத்துக் கொழுப்பைத் தளர்த்த ஆன்ட்டி செலுலைட்டிஸ் தெரபி
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மேனகா மணப்பெண்ணான இவருக்கு உடலின் வடிவத்தைத் திருத்துவதற்கான Body Shaping பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. திருமணம் நெருங்குவதால் இவருக்குத் தீவிரமான உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்ட உணவுத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சுசித்ரா தேவி மற்றும் அனிதா இவர்கள் இருவருக்கும் தொடைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகம். அதனால் சைக்கிளிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஒருவகையான கார்டியோ எக்சர்சைஸ். கார்டியோ பயிற்சிகள், இதயத்துக்கு ஆரோக்கியமானவை. எல்லாவிதமான கார்டியோ பயிற்சிகளுமே கொழுப்பைக் கரைக்க உதவக்கூடியவை. அதன் விளைவாக எடைக் குறைப்பை அடைவதும் எளிதாகும்.
ld4562

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button