சைவம்

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
தண்ணீர் – ¼ கப்
உருளைக்கிழங்கு – 4
தயிர் – 1½ கோப்பை
கொத்தமல்லை தழை – சிறிதளவு
நீர் – ½ கப்
துருவிய தேங்காய் – ¼ கப்
உப்பு – சுவைக்கு

தாளிக்க :

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஓமம் – ½ தேக்கரண்டி

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.201704041316308004 potato mor kulambu potato with ButterMilk SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button