ஆண்களுக்கு

ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்த செய்ய வேண்டும்?

ஆண்களில் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து வேறுபட்டது. அவர்களுடைய சரும அடுக்குகள் மற்றும் அமைப்பு சற்று கடினமானதும் வெயில், தூசு மற்றும் மாசுகளுக்கு அதிகம் உட்படுவதும் ஆகும்.

ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதை எப்போது செய்யவேண்டும் என்பதை அவர்கள் பெரும்பாலும் தெரிந்துவைத்திருப்பதில்லை.

உங்க சருமரத்தை குறையில்லாமல் வைக்கத் தயாராகுங்க. அதை எப்படி செய்வது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று எக்ஸ்ஃபோலியேட் செய்யவேண்டும்.(இறந்த செல்களை அகற்றுதல்). இதோ வீட்டில் நீங்கள் செய்யக் கூடிய ஸ்க்ரப்பர்கள்

1. பாதாம் எண்ணெய், உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஸ்க்ரப்: நீங்கள் வறண்ட சருமமுடைய ஆணாக இருந்தால் இது உங்களுக்கு பெரிதும் உதவும். அரை டீஸ்பூன் பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பை கலக்கவும்.

அதை முகத்தில் போட்டு சுழற்சியாக தேய்க்கவும். மிகவும் அழுத்தம் தரவேண்டாம் அவ்வாறு செய்து இரண்டு நிமிடம் கழித்து நன்கு முகத்தை கழுவிவிடவும்.

2. அரிசிமாவு, தயிர் மற்றும் சமையல் சோடா ஸ்க்ரப்: சில நிமிடங்களில் எக்ஸ்ஃபோலியேட் செய்ய உதவும் எளிதான வழி வேண்டுமென்றால் இது உங்களுக்குத் பொருத்தமாக இருக்கும். அரிசி மாவை எடுத்துக் கொண்டு அதில் தயிரை கலந்து கெட்டியான கூழாக செய்துகொள்ளவும்.

அதில் சிறிது சமையல் சோடாவை கலந்து அதை மேற்கூறியவாறு சுழற்சியாக முகத்தில் சில நிமிடங்கள் தேய்க்கவும். இதை சுத்தமான முகத்தில் மட்டுமே செய்யவேண்டும். இது எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.

3. தயிர், வால்நட் மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்-: இதற்கு நீங்கள் வால்நட் பவுடரும் தயிரும் கலந்து அதில் எலுமிச்சை சாற்றையும் நன்கு கலக்க வேண்டும். இது இறந்த செல்களை நீக்குவது மட்டுமல்ல, கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை திரும்பப் பெற்றுத்தரும்.

4. கற்றாழை மற்றும் மஞ்சள்தூள் ஸ்க்ரப்: நீங்கள் வெளியில் சென்று அதிக நேரம் பணிபுரிபவரானால் உங்கள் நிறம் கறுப்பாகிவிட வாய்ப்புகள் உண்டு. அதை மீண்டும் வெண்மையாக்க இந்த ஸ்க்ரப் உதவும்.

காற்றாழையில் இருந்து புதிதான ஜெல்லை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் சருமத்தில் தடவி உலரும் வரை தேய்த்து விடுங்கள். பின்னர் தண்ணீர் விட்டு கழுவிவிடுங்கள்.

5. தேன், எலுமிச்சை மற்றும் பால் பவுடர் ஸ்க்ரப்: இது மற்றுமொரு கருமையைத் தடுக்கும் ஸ்க்ரப். இவற்றில் அனைத்தையும் சம அளவு எடுத்து நன்கு கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் பாதாம் அல்லது ஆலிவ் எண்ணையை சேர்த்துக்கொள்ளலாம்.

இதை உங்கள் சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு நாளைக்கு இருமுறை செய்தால் நல்ல பலங்கள் கிடைக்கும்.

7. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்: இரண்டையும் சம அளவு எடுத்து வெது வெதுப்பான நீரில் கலக்கிக் கொள்ளவும். மென்மையான கூழாக ஆனவுடன் அதை சருமத்தின் மீது மெல்ல தேய்க்கவும். இது உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் நீங்க மிகவும் சிறந்தது.

skin 05 1480912410

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button