சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான கோதுமை காக்ரா

மும்பையில் மிகவும் பிரபலமான காக்ரா. இந்த காக்ராவை கோதுமை மாவை வைத்தும் செய்யலாம். இன்று இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான கோதுமை காக்ரா
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒன்றரை கப்,
ரவை – கால் கப்,
சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
சமையல் சோடா – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

201704211046200848 wheat khakhra. L styvpf
செய்முறை :

* கோதுமை மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும்.

* பிசைந்த மாவை சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு சுழற்றி, திருப்பிப் போடவும்.

* இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து வைக்கவும்.

* இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும்.

* ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது.

* இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button