மருத்துவ குறிப்பு

பாரா தைராய்டு சுரப்பி

பாரா தைராய்டு சுரப்பி என்றால் என்ன?
கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பிக்கு பின்புறம் உள்ள சிறிய, பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கும், நான்கு நாளமில்லா சுரப்பிகள் இவை.
இவற்றின் பணி என்ன?

எலும்பு, ரத்தத்தில் கால்சியம் சத்து சீராக கிடைக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்தை செயல்திறன் உள்ள சத்தாக மாற்ற உதவுகிறது. தவிர, பாஸ்பரஸ் சத்தின் விகிதத்தை சரி செய்கிறது.
கால்சியம் உடலுக்கு ஏன் அவசியம்?
எலும்புகள் சீராக வளரவும், உறுதியாக இருக்கவும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம். ரத்தத்தில் கால்சியம் அளவு, 8.5 மி.கி., முதல் 10.மி.கி., வரை இருக்க வேண்டும்.
கால்சியம் குறைய பாரா தைராய்டு காரணமா?
உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம் குறைந்தால், ரத்தத்தில் கால்சியம் குறைய ஆரம்பிக்கும். இதனால், பாரா தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்து, எலும்பில் இருக்கும் கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் கலக்கும். இதனால், எலும்பில் கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஆஸ்டியோமலேசியா என்ற எலும்பு பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு, ரிக்கெட்ஸ் எனும் எலும்பு வளையும் பிரச்னை ஏற்படலாம்.
ஹைப்போ பாரா தைராய்டிசம் என்பது என்ன?
பாரா தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பது, ஹைப்போ தைராய்டிசம் எனப்படும்.
இதனால், என்ன பிரச்னைகள் ஏற்படும்?
உடலில் கால்சியம், பாஸ்பரஸ் விகிதத்தில் சமச்சீரற்ற நிலை உருவாகும். கால்சியம் சத்தை எலும்புகள் கிரகிக்காது. அதே சமயம், ரத்தத்திலும் கால்சியம் அளவு குறையும்.
இதை சரி செய்வது எப்படி?
கால்சியம் மாத்திரைகள், கால்சியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது. தினமும், 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதால் கிடைக்கும் வைட்டமின் டி இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.
ஹைப்பர் பாரா தைராய்டு பாதிப்பு என்பது என்ன?
ஆட்டோ இம்யூன் காரணமாக, பாரா தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியம் அதிகமாக வெளியேறும். இதனால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகவும், எலும்பில் குறைவாகவும் இருக்கும்.
இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு நோய் வரும். சிறுநீரகத்தில் கால்சியம், உப்பு தேங்கி சிறுநீரக கற்கள் உருவாகும். வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்து, பெப்டிக் அல்சர் வரும். ld1596

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button