சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்வீட் கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஸ்வீட் கார்னை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை
தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப்,
உளுந்து – ஒரு டீஸ்பூன்,
பச்சரிசி – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 10,
சோம்பு – அரை டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்
புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லை – அனைத்தும் சேர்ந்து ஒரு கப் (நறுக்கியது),
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பில்லையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூழ்குமளவு நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஊற வைத்த உளுந்து, பச்சரியுடன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைக்கவும்.

* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சோம்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ஸ்வீட் கார்ன் வடை ரெடி.201704291305341891 Evening Snacks Sweet Corn vada SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button