சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

சிறுதானியத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கை கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை
தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு சேர்த்து – கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி சேர்த்து – கால் கிலோ,
முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை – தலா 4 டீஸ்பூன்,
வெங்காயம் – 2
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 10 பல்,
முருங்கை கீரை – 2 கைப்பிடி,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

201705121052440859 millets Drumstick leaves adai SECVPF
செய்முறை :

* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

* நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்ற எண்ணெய் விட்டு அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் வேக விட்டு சுட்டு எடுக்கவும்.

* சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button