சரும பராமரிப்பு

எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. இன்று ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.

எனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இந்தக் கட்டுரையில் ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது நாம் ஆயில் ஸ்கின் பிரச்சனையைப் போக்கும் சுலபமான சருமப் பராமரிப்பு முறைகளைப் பற்றி பார்ப்போம்…

முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் உபயோகிக்கும் மாய்ஸ்சுரைசரை தான் கவனிக்க வேண்டும். எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பதே மிக சிறந்த முறையாகும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் வெடிப்பு என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய ஒன்று. எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக முகத்தை ஸ்க்ரப் உபயோகித்து சுத்தம் செய்தே ஆக வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்வு செய்து முகத்தைக் கழுவி முகத்தில் சேர்ந்துள்ள இறந்த சரும செல்களை நீக்க வேண்டும்.

201705261016332995 How to care for oily skin naturally SECVPF
ஆயில் சருமத்திற்காக இயற்கை நமக்கு அளித்த ஒரு மருந்து என்றால் அதுதான் முல்தாணிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தாணிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அதிக மேக்கப் போடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிக மேக்கப் போடுவதால் முகத்தில் வெடிப்பு மற்றும் பருக்களை ஏற்படுத்தக்கூடும். மிதமாக மேக்கப் போட்டால் தான் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் மிக அழகாகத் தெரிவார்கள்.

சுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் இவை இரண்டுமே ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பொருந்தாத ஒன்று. மிதமான சூடுள்ள நீரில் குளித்தால் மட்டுமே முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்து வெளியேறும். ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் கிடைக்க எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் டோனர் உபயோகப்படுத்துவால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும் வெடிப்புகளைப் போக்கி சரும அழகை மேம்படுத்தும்.

உங்களால் முடிந்த வரை உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு உபயோகிக்க வேண்டும். சருமத்தை வறட்சி அடைய மட்டும் விட்டுவிடாதீர்கள். பின்னர் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அனைத்து வகையான சன்ஸ்கிரீன்களையும் உபயோகிக்க முடியாது. அவர்களது சருமத்திற்குத் தகுந்த சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், முகத்தில் பருக்கள் ஏற்படக்கூடும். எனவே, இந்த மாரிதியான அழகு சாதனப் பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button