ஆரோக்கிய உணவு

கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன.

வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது.

அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.

ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.

அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம்.

ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

கொண்டைக்கடலை_சுண்டல்‬

கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

பயன்கள்‬

இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கொண்டைக்கடலை_குழம்பு‬

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதன்பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கிவிட்டு, வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட்டால் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

#பயன்கள்

இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.

இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.
27 1369637535 4 chickpeas

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button