முகப் பராமரிப்பு

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். இன்று மாம்பழ பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்
மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்.

மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியுடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். பின் முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு 20 நிமிடம் நன்றாக காய விடுங்கள். பிறகென்ன சுருக்கங்கள் முகத்திற்கு பை பை சொல்லும். வேண்டாத சதைகள் இறுகி, முகத்தில் வரும் தொய்வினை தடுக்கும்.

முகத்திலும், மூக்கிலும் கரும்புள்ளிகள் உள்ளனவா? நன்றாக காய வைத்த மாம்பழத் தோலினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் தேன் சேர்த்து, கலந்து முகத்தில் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து செய்தால், கரும்புள்ளிகள் போயே போச்சு.

மாம்பழத் தோலினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் பால் பவுடரை கலந்து பேஸ்ட் போலச் செயுங்கள். இதனை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். உங்கள் சருமத்தை மெருகேற்றும். மாசு மருவில்லாத க்ளியரான சருமம் கிடைக்கும்.

முகப்பருக்கள் டீன் ஏஜ் வயதினருக்கு ஒரு தீராத தொல்லைதான். என்ன செய்தாலும் போக வில்லை என்று கவலைப் படாதீர்கள். மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசலாம். நாளடைவில் முகப்பரு இருந்த இடம் தெரியாது. 201706071216352694 face wrinkles control mango face pack SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button