ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களிடம் ஆண்கள் பேச தயங்கும் விஷயங்கள்! அதற்கான காரணம் …

பெண்களை ஒப்பிடும்போது பெரும்பாலான ஆண்கள் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதில்லை. பல விஷயங்களை மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். தக்க சமயத்தில் அதனை வெளிப்படுத்தும் சூழல் அமைந்தாலும் கூட மனம் விட்டு பேச தயங்குவார்கள். திருமணத்திற்கு முன்பும், பின்பும் தனது சுபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே தொடர்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடந்த கால வாழ்க்கையை பற்றி மனைவியிடம் கூட பெரிய அளவில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஒருசில உண்மைகளையும், ரகசியங்களையும் மனைவியிடம் கூறாமல் மறைத்துவிடுவார்கள். அவை பற்றி மனைவி அறிய முற்பட்டால் பேச்சை திசை திருப்பி விடுவார்கள். ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் பொய் கூறி தப்பித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். மனைவியிடம் என்னென்ன விஷயங்களையெல்லாம் வெளிப்படையாக பேச தயங்குகிறார்கள், அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

* வெளி இடங்களுக்கோ, சுப நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது மனைவி ஆடை தேர்வில் தீவிரம் காட்டுவார். அதுபோலவே மனைவி எந்த மாதிரியான ஆடை அலங்காரம் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கணவருக்கு இருக்கும். செல்லும் இடத்திற்கு ஏற்ப ஆடை தேர்வு அமைந்திருக்க வேண்டும் என்றும் விரும்புவார். ஆனால் மனைவியின் ஆடைத்தேர்வு வேறு விதமாக அமையும் பட்சத்தில் கணவருக்கு பிடிக்காமல் போகலாம். அதனை ஒரு சில ஆண்கள்தான் மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். ஒருவேளை மனைவி திட்டிவிட்டாலோ, மன வருத்தம் கொண்டாலோ என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே நிறைய பேர், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

* திருமணத்திற்கு முன்பு கணவர் வேறு ஏதாவதொரு பெண்ணை காதலித்திருக்கலாம் அல்லது ஒருதலை காதல் வயப்பட்டிருக்கலாம். அதனை தப்பித்தவறி கூட மனைவி யிடம் சொல்ல விரும்பமாட்டார்கள். மனைவிக்கு தெரிந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ, தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயத்திலேயே உண்மையை மறைத்துவிடுவார்கள்.

* தங்கள் காதல் விவகாரத்தை மறைக்கும் ஆண்கள், மனைவி திருமணத்திற்கு முன்பு காதல் வயப்பட்டிருப்பாரோ? என்ற சந்தேகத்தை மனதுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். ஆனால் வெளிப்படையாக மனைவியிடம் கேட்க மாட்டார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமையும்போது சந்தேக எண்ணத்துடனேயே மனைவியை கேள்விகளால் துளைத் தெடுப்பார்கள். ஒருவேளை மனைவி காதல்வசப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பாலான ஆண்களுக்கு இருப்பதில்லை. திருமணத்திற்கு முன்பே அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். அதுபற்றிய எண்ணமே மனைவியிடம் இருக்காது. முற்றிலும் மறந்துபோயிருப்பார். ஆனால் கணவரோ அதனையே நினைவில் வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் அமையும்போது அதனை கிளறி மனைவியை காயப்படுத்த வாய்ப்புண்டு. அதனால் கடந்த கால காதல் விவகாரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

* ஆண்கள் தங்கள் வருமானத்தை யாரிடமும் வெளிப்படையாக சொல்வதில்லை. மனைவியிடம் கூட சிலர் மாத வருமானத்தை பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். மனைவி வற்புறுத்தி கேட்டாலும் கூட உண்மையான வருவாயை சொல்ல தயங்குவார்கள். அலுவலக பணி புரிபவர்கள் பெரும்பாலும் சம்பளம் உயர்த்தப்படும் விஷயத்தை மனைவியிடம் மறைப்பதுண்டு. வேலைக்கு செல்லும் மனைவியின் சம்பளம் தன் சம்பளத்தை விட அதிகமாக இருந்தால் சம்பள பேச்சை எடுக்கமாட்டார்கள்.

* சம்பளத்தை போலவே பதவி உயர்வு, ஊக்கத்தொகை பற்றிய விவரங்களையும் மனைவியிடம் பகிர்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒருசிலர் மட்டும்தான் அதுபற்றி வெளிப்படையாக சொல்வார்கள்.

* ஆண்கள் படித்ததில் பிடித்தமான விஷயங்களை கூட மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக காதல் கதைகள், பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி மனைவியிடம் கூறத் தயங்குவார்கள்.

Source: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button